2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

மூத்தோர் அணியின் தேசிய இஜ்திமா...

Editorial   / 2022 நவம்பர் 07 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அஹ்மதியா  முஸ்லிம் ஜமாஅத்தின் மூத்தோர் அணியின் ( மஜ்லிஸ் அன்ஸாருல்லாஹ்) தேசிய இஜ்திமா பஸ்யாலை அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் இன்று (07) திங்கட்கிழமை   நடைபெற்றது.

தேசிய மூத்தோர் அணியின் தலைவர்  ஐ. ஏ. மஸுத் அஹ்மத் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் நீர்கொழும்பு, கொழும்பு, பஸ்யாலை, புத்தளம், பொலன்னறுவை உட்பட நாட்டின் பல பிரதேசங்களிடம் இருந்து வந்தவர்கள் பங்குபற்றினர்.

அத்துடன் இலங்கையில் தற்காலிகமாக வசிக்கும் பாகிஸ்தான் அஹ்மதி முஸ்லிம்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். பேச்சு, ஹுர்து நஸம் ( ஹுர்து கீதம்), ஆகியன இடம்பெற்றன. அத்துடன் கிராத், ஹுர்து நஸம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.   (எம் இசட். ஷாஜஹான்)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X