Editorial / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான Ever Ace நேற்று (06) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச முனையத்துக்கு குறித்த கப்பல் வருகை தந்துள்ளதாக துறைமுகங்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.
முதற்தடவையாக கொழும்பு துறைமுகத்தை அக்கப்பல் வந்தடைந்தது. நேற்று (06) நள்ளிரவு வரையிலும் நங்கூரமிடப்பட்டிருக்கும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
Evergreen நிறுவனத்துக்குச் சொந்தமான 400 மீட்டர் நீளமான குறித்த கப்பலில் 24,000 பாரிய கொள்கலன்கள் உள்ளன.
61.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த கப்பல், 22.6 கடல் மைல் வேகத்தில் நகரக்கூடியது.
அந்தக் கப்பல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி ஆசிய – ஐரோப்பிய சமுத்திரம் வரை பயணத்தை ஆரம்பித்தது
அக்கப்பல், கிங்டாவோ, ஷங்காய், நிங்போ,தாய்பே, யன்டியன், ரொட்டர்டேம், ஹேம்பர்க் மற்றும் பெலிக்ஸ்டோவ் ஆகிய துறைமுகங்களுக்கு பயணித்துள்ளது.
49 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
53 minute ago
2 hours ago