2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

சர்வதேச உணவுத் திருவிழா ...

Editorial   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம், வியட்நாமின் வெளியுறவு அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டு,2022 டிசெம்பர் 11 அன்று ஹா நொய் நகரில் நடைபெற்ற வருடாந்த சர்வதேச உணவுத் திருவிழாவில் பங்கேற்றது.

இந்த வருடாந்த நிகழ்வின் 10வது மாநாட்டில், இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச நிறுவனங்கள், ஹா நோயில் உள்ள சர்வதேச அரச சாரா நிறுவனங்கள், வெளியுறவு அமைச்சின் மாகாண அலுவலகங்கள், மாகாண அரசுகள் மற்றும் வியட்நாமிய உணவு மற்றும் பானத் துறைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 நிகழ்வின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக இலங்கைக் கூடம் அமைந்திருந்ததுடன், உண்மையான இலங்கை உணவுகளான கொத்து ரொட்டி மற்றும் அப்பம் ஆகியவை நேரடியாக தயாரிக்கப்பட்டன. டில்மா - சிலோன் டீ - வியட்நாமும் இந்நிகழ்வில் பங்குபற்றியதுடன், இலங்கையின் குறுகிய உணவுகளுடன் சிலோன் தேநீரைப் பரிமாறியது. வியட்நாமியரும் வெளிநாட்டவரும் இலங்கை உணவையும் அன்பான விருந்தோம்பலையும் அனுபவித்தனர்.

 131 கூடங்களை உள்ளடக்கிய உணவுத் திருவிழாவில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். ஹா நோய் மற்றும் வியட்நாமின் ஏனைய முக்கிய நகரங்கள் மற்றும் மாகாணங்களில் உள்ள இலங்கை சமூகத்தினரும் இந்த நிகழ்வில் தீவிரமாக பங்கேற்றதுடன், மிகவும் வெற்றிகரமான ஊக்குவிப்பு நிகழ்ச்சியை நடாத்துவதற்கு தூதரகத்திற்கு தாராளமான உதவிகளை நல்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X