Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2022 மே 29 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27) ஆம் திகதி காணாமல்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே, காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சிறுமியை தேடும் நடவடிக்கைகள், பொலிஸ் மோப்பநாய்க் கொண்டு முன்னெடுக்கப்பட்டன.
அச்சிறுமியின் சடலம், சேற்றுக்குள் இருந்தே, நேற்று (28) மாலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago