2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

ஆய்வு மற்றும் ஆவணவகம்...

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 04 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த எழுத்தாளர் சாகித்ய ரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆய்வு மற்றும் ஆவணவச் சேகரிப்பு பணிகளை கௌரவிக்கும் வகையிலும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் பாக்யா பதிப்பகம் முன்னெடுக்கும் நிலைபேறான நினைவேந்தல் திட்டமாக 'தெளிவத்தை ஜோசப் ஆய்வு மற்றும் ஆவணவகம்' ( Theliwatte Joseph Reserch and Documentation Centre ) வத்தளையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தெளிவத்தை ஜோசப் அவர்களின் துணைவியார் திருமதி. பிலோமினாள் ருபெல்லா ஜோசப் அம்மையாரின் கரங்களினால் திறந்து வைக்கப்பட்ட நிலையத்தின் பணிகளை பாக்யா பதிப்பகம் முகாமைச் செய்யவுள்ளதாக அதன் நிறுவுனரும் எழுத்தாளருமான மல்லியப்புசந்தி திலகர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X