2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

டயகம சிறுமியின் சடலத்தை மூவர் அடையாளம் காட்டினர்

Editorial   / 2021 ஜூலை 30 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் ,எஸ்.கணேசன்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இன்று (30) பிற்பகல் 12.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்ட, டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியான ஜூட்குமார் ஹிசாலியின் சடலம், அடையாளம் காணப்பட்டது.

அடையாளம் காண்பதற்காக அழைக்கப்பட்ட அவரது தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் சடலத்தை அடையாளம் காண்பித்தனர். இதனையடுத்து, சவப்பெட்டி மூடப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதுயுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 3ஆம் திகதியன்று தீக்காயங்களுக்கு உள்ளானார். அதன்பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், 16ஆம் திகதியன்று மரணமடைந்தார்.

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அச்சிறுமியின் பெற்றோரும், தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவருடைய சகோதரனும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .