Freelancer / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறக்குறைய ரூபாய் 7 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடி, அதன் இன்ஜின் எண்கள் மற்றும் செசிஎண்களை மாற்றி சமூக வலைத்தளமான "பேஸ்புக்" மூலம் குறைந்த விலைக்கு விற்ற தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் மற்றும் திருட்டுப் பொருட்கள் என அறிந்து மோட்டார் சைக்கிளை வாங்கிய அம்புலன்ஸ் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் பந்துலகம பகுதியைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்லூரியில் கார் மெக்கானிக் பயிற்சி வகுப்பில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவர் மற்றும் வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் ஆம்புலன்ஸ் ஊழியருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பொலிஸாரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் பாடசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த எப். இசட் ரக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் இந்த மோட்டார் சைக்கிளை திருடி அதன் இன்ஜின் எண் மற்றும் செசி எண் ஆகியவற்றை மிக நுணுக்கமாக அழித்து, மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து ரூபாய் 1,65,000 ற்கு விற்பனை செய்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஏறக்குறைய ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை வாங்கிய அம்புலன்ஸ் ஊழியர், குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை அறிந்து, இன்ஜின் எண்கள் மற்றும் செசி எண்கள் இல்லாததால், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க மற்றொரு மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டை பொருத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
25 minute ago
35 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
49 minute ago
54 minute ago