2023 ஜூன் 07, புதன்கிழமை

மாணவன் மரணம்: விசாரணை ஆரம்பம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகலில், கால்வாய்க்குள் விழுந்து 14 வயது மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாடசாலையிலிருந்து வீடு சென்றுகொண்டிருந்த குறித்த மாணவன், வேன் ஒன்றுக்கு இடமளிக்க முயன்று, வீதிக்கு அருகில் சென்றபோது, கால்வாய்க்குள் தவறி விழுந்திருந்தார்.

ஒரு மணித்தியாலமாக கால்வாய்க்குள் சிக்கியிருந்த அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்திருந்தார். 

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .