2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

திடீர் மரண விசாரணை அதிகாரி நியமிக்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்தின், நாத்தாண்டிய மற்றும் வென்னப்புவ தொகுதிகளுக்கு, திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்குமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், புத்தளம் தொகுதி அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிசாந்த பெரேராவின் இணைப்பாளரான  ஏ.எச்.எம்.ரியாஸ், நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்படி  பிரதேசங்களுக்கு,  திடீர் மரண விசாரணை அதிகாரிகளை அவசரமாக நியமிக்க வேண்டிய அவசியத்தையும்   நீதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

நீதி அமைச்சர் அலிசப்ரியை நேற்று (16))நேரில் சந்தித்த தொகுதி அமைப்பாளர் ஏ.எச்.எம்.ரியாஸ்,  குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேற்குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதியமைச்சர், மிக விரைவில் திடீர் மரண விசாரணை அதிகாரியை  நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .