2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சமூக சேவை நிறுவனமாக யூத் விஷன் பதிவு

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன் 

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான (க.பொ.த.சாதாரண தரம்1998, உயர் தரம் 2001) யூத் விஷன் அமைப்பு, அரச அங்கீகாரம் பெற்ற, சமூக சேவை நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கான சான்றிதழை,  அமைப்பின் தலைவரும், புத்தளம் ஐ.சொப்ட் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான ஏ.கே.எம்.அப்ராஸ், செயலாளர் எம்.ஜெ.எம்.ஜலீல், பொருளாளர் எம்.ஏ.சி. அப்துல் பத்தாஹ் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்கள் புத்தளம் பிரதேச செயலகத்தில் உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டனர். 

இந்த அங்கீகாரத்தைப் பயன்படுத்தி,  சமூக நலன் திட்டங்கள் உள்ளிட்ட சமூக மட்டத்திலான பல்வேறு விதமான அடிப்படை தேவைகளை தீர்த்து வைக்க தமது அமைப்பினர் அதிரடியாக களம் இறங்க உள்ளனரென, அதன் தலைவர் ஏ.கே.எம்.அப்ராஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .