2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

29 பேருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2021 மே 15 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

கடல் வழியாக, அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராக விருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 29 பேரும் அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை நல்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவரும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் நுவன் ஜயவீர, மேற்படி உத்தரவை கடந்த 14ஆம் திகதியன்று பிறப்பித்தார்.

சிலாபம்- அம்பகதவில பிரதேசத்தைச் சேர்ந்தவரும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, புதுகுடியிருப்பு ஆகிய பிரதேசங்களைச் ​சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் 19 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X