2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

‘பொருளாதாரம் குறித்து அலட்சிய போக்கு வேண்டாம்’

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், செய்கடமை ஆகியவற்றுடன் இணைந்து, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க, முன்வந்துள்ளதாக யூனியன் அஷ்யூரன்ஸ் அறிவித்துள்ளது. 

அரசாங்கமும் தனியாரும் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளில் வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது,  மக்களின் சுகாதாரம், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்த்துக் கொள்வதற்கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றன அடங்கியிருக்கும்.  

தொற்றுப் பரவல் தொடர்பில், பொது மக்கள் மத்தியில் போதியளவு விழிப்புணர்வின்மை, தொற்றுப் பரவலின் போது அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களின் பண்புகள், செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது, அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது. போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அறிவூட்டுவதற்குப் பரிபூரண பொதுச் சுகாதார கல்வியறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் அவசியமானதாக அமைந்துள்ளது.  

ஒக்டோபர் 19 ஆம் திகதி முதல், விழிப்புணர்வுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ‘பாதுகாப்பின் பொறுப்பை நிறைவேற்றுவோம்’ எனும் தொனிப்பொருளுடன், பொது மக்கள் மத்தியில் தம்மையும் ஏனையவர்களையும் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருந்தது. டிஜிட்டல் ஊடகத்தில் வீடியோக்கள், பதிவுகள் போன்றன வெளிப்படுத்தப்பட்டு இருந்ததுடன், பாரம்பரிய ஊடகக் கட்டமைப்புகளிலும் அவை ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன.  

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ், இந்தப் பங்காண்மை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், “கொரானா வைரஸ் பரவலிலிருந்து, மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் தேசிய செயற்பாடுகளுக்கு, எமது உறுதியான பங்களிப்பை வழங்குகின்றோம். இந்தத் தேசிய நடவடிக்கைக்குப் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மைக் குடிமகன் எனும் வகையில், பங்களிப்பு வழங்க வேண்டியது எமது கடமையாக அமைந்துள்ளது. நாட்டின் சகல பாகங்களுக்கும் இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது  தொடர்பான, தகவலைக் கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றோம்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .