2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

சிலாபத்தில் பலருக்கு கொரோனா தொற்று

S. Shivany   / 2020 நவம்பர் 26 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், ஆனமடுவ மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளில் இன்று (26) அதிகாலை வரை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் கூடுதலானோர் சிலாபம்-வெல்ல பகுதியில் பதிவாகியுள்ளனர். இதற்கமைய அப்பகுதியில் இதுவரை 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை மற்றும் லுணுவில் பகுதியில் உள்ள இரால் பண்ணை என்பவற்றில்  பணியாற்றியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .