2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

இலங்கையில் முதன் முறையாக paper straw அறிமுகம்

S.Sekar   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான, மைலோ, அதன் Ready-to-Drink (RTD) தயாரிப்பில் paper straw களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் நுகர்வோர் சூழலின் பேண்தகமையைப் பேணுகின்ற வகையில் RTD பான வகை ஒன்றினால் முதன்முதலாக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு முயற்சியாகும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முயற்சியின் மூலமாக நிறுவனம் ஆண்டொன்றுக்கு 90 மில்லியன் plastic straw களை அகற்ற இடமளிப்பதுடன், மேலும் அனைத்து புதிய மைலோ பொதியிடல் செயற்பாடுகளும் 100% மீள்சுழற்சி செய்யக்கூடியதாக மாறும். இந்த முயற்சி நெஸ்லே தனது பொதியிடல் செயற்பாடுகளின் மூலமாக ஏற்படுகின்ற தாக்கத்தை குறைக்க எடுக்கும் பல நடவடிக்கைகளில் ஒன்றாகும். 

மேலும், பால் அட்டைப்பெட்டிகளை மீள்சுழற்சி செய்வதற்கான தொழிற்சாலையொன்றும் அமைக்கப்பட்டுள்ளதுடன், இது Tetra Pak மற்றும் நெஸ்லே போன்ற உணவு மற்றும் பான வகை நிறுவனங்களின் துணையுடன் இயங்கும். இந்த தொழிற்சாலை மைலோ RTD ஐ மீள்சுழற்சி செய்யும் என்பதுடன், இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த பான அட்டைப்பெட்டி தொழிற்துறைக்கும் பயனளிக்கும். மைலோ RTD பானம் அருந்தி முடிக்கப்பட்ட பின்னர், அவற்றை பொறுப்புணர்வுமிக்க முறையில் அப்புறப்படுத்தல் மற்றும் மீள்சுழற்சிக்காக சேகரித்தல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக கல்வியமைச்சு, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் உரிய மாநகர சபைகளுடன் இணைந்து நெஸ்லே நிறுவனம் தற்போது முன்னெடுத்து வருகின்ற பாடசாலைகள் கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் அனுகூலத்தை இதற்காக உபயோகிக்கும். இது 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 250 பாடசாலைகளை எட்டும். பிளாஸ்டிக் பொதியிடல் கழிவுகளுக்கான  சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நிறுவனம் பல முன்னேற்றகரமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் நுகர்வோர் மத்தியில் இந்த மாற்றத்திற்கு உதவ, நடத்தை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கும் பொறுப்புணர்வுடன் அகற்றலை ஊக்குவிப்பதற்கும் பரந்த அளவிலான நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .