Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
S.Sekar / 2021 ஜூலை 19 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, அலியான்ஸ் லங்காவுடன் பிரத்தியேக பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. செலான் கடனட்டைதாரர்களுக்கு, அலியான்ஸ் லங்காவிடமிருந்து கார்களுக்கு காப்புறுதி ப்ரீமியம்களை மேற்கொள்ளும் போது 18% விலைக்கழிவை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், ஏனைய சகல வாகனங்களுக்குமான கொடுப்பனவுகளின் போதும் 20% சேமிப்பை பெற்றுக் கொள்ள முடியும். அவர்களுக்கு இந்த கொடுக்கல் வாங்கல்களை 12 மாதங்களுக்கு 0% வட்டியில்லாத தவணைமுறை மீளக் கொடுப்பனவு திட்டங்களாக மாற்றிக் கொள்ள முடியும்.
அலியான்ஸ் லங்காவில் புதிய மோட்டார் காப்புறுதித் திட்டங்களை கொள்வனவு செய்யும் போது, இந்த பிரத்தியேகமான விலைக்கழிவுகளுடனான ப்ரீமியம்கள் செலான் கடனட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்றது. அலியான்ஸ் மோட்டார் காப்புறுதி நிறுவனத்தில் செலான் கடனட்டையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ரூ. 15,000க்கு அதிகமான கொடுக்கல் வாங்கல்கள், 2021 ஆகஸ்ட் மாதம் இறுதி வரை, 0% வட்டியில்லாத தவணைமுறை மீளக் கொடுப்பனவு திட்டத்துக்கு மாற்றிக் கொள்ளும் தகைமையைப் பெறும். ஆகக்கூடிய கொடுக்கல் வாங்கல் பெறுமதி வருடாந்தம் ரூ. 500,000 ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .