2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

பணிக்கு செல்வோருக்கு பணியகத்தின் செய்தி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வேலைக்குச் செல்லும் பணியாளர்களுக்கு இன்று (14) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விரைவான பிசிஆர் (Rapid PCR) சோதனைகள் நடத்தப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையத்துக்கு வர வேண்டும் என்று பணியகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் நுழைவதற்கு முன்னர், அனைத்து நபர்களும் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத் துறை தீர்மானித்திருந்தது.

அதன்படி, விமான நிலையம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றால் தேவையான பரிசோதனை வசதிகள் வழங்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X