2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

புலமைப் பரிசில்கள் வழங்கிவைப்பு...

Ilango Bharathy   / 2021 ஜூலை 17 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம். செல்வராஜா

கடந்த  2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சா/த மற்றும் க.பொ.த. உ/த பரீட்சைகளில் சிறப்பு சித்திபெற்ற பதுளை மாவட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றைய  தினம்(17)  ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் பதுளை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, சாமர சம்பத் தசனாயக, ஏ. அரவிந்த குமார், ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .