2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் Clicklife உடன் கடதாசி பாவனையற்ற, பொருத்தமான பாதுகாப்பு

S.Sekar   / 2021 ஜூன் 29 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீன கொள்வனவு அனுபவத்துடன், ஒன்லைன் பாதுகாப்பை வாடிக்கையாளர்கள் தற்போது கொள்வனவு செய்யக்கூடிய வசதியை யூனியன் அஷ்யூரன்ஸ் தனது Clicklife டிஜிட்டல் ஆயுள் காப்புறுதித் தீர்வினூடாக அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக 100% கடதாசி பாவனையற்ற, பொருத்தமான காப்புறுதித் தீர்வை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். நாளொன்றுக்கு ரூ. 23/- செலுத்தி, 4 மில்லியன் ரூபா வரையான பாதுகாப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

 

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக வாழ்க்கை பொருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்புக்குரியவர்களை பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையும் உலகளாவிய ரீதியில் அதிகரித்த வண்ணமுள்ளது. நடமாடல் கட்டுப்பாடுகள், நேரடியான தொடர்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நுகர்வோருக்கு அவசியமான பாதுகாப்பை பெற்றுக் கொள்வது போன்ற சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. Clicklife ஊடாக நுகர்வோருக்கு முகவர்களை சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்பதுடன், படிவங்களை நிரப்புவது அல்லது மருத்துவ ஆவணங்களை வழங்குவது போன்றவற்றுக்கான தேவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் காப்புறுதியை கொள்வனவு செய்வதற்கான புதுவித அனுபவமாக இது அமைந்துள்ளது.

 

யூனியன் அஷ்யூரன்ஸ் மேற்கொண்டுள்ள இந்த ஏற்பாடுகள் தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “ஆயுள் காப்புறுதியில் நாம் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். பாரம்பரிய முறைகள், கடதாசி பாவனை மற்றும் நேரடி சந்திப்புகள் போன்றவற்றை இல்லாமல் செய்து, பாதுகாப்பை கொள்வனவு செய்யும் செயன்முறையை எளிமைப்படுத்தியுள்ளோம். Clicklife இனால் டிஜிட்டல் முறையில் இலங்கையர்களின் கனவுகளை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதிக்கு பொருத்தமான வகையில் இந்தத் தீர்வுகள் அமைந்துள்ளன. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய எமது பயணத்தில், தற்போதைய தேவையை நிவர்த்தி செய்வது பற்றி நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இதனூடாக இலங்கையின் எப்பகுதியிலுமிருந்து, கடதாசி பாவனையற்ற தீர்வை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு எளிமையான மற்றும் வினைத்திறன் வாய்ந்த தீர்வை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

 

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்லும் நிலையில், பாதுகாப்பு என்பது எதிர்காலத்துக்காக தயார்ப்படுத்திக் கொள்ளவும், அன்புக்குரியவர்களுக்காக ஆதரவை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது. பொருத்தமான வகையில் நாளொன்றுக்கு ரூ. 23 எனும் அடிப்படையில் இந்த தீர்வு ஆரம்பிப்பதுடன், மரணம் சம்பவித்தால் 2 மில்லியன் ரூபாயை வழங்குவதுடன், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக உயிரிழந்தால 3 மில்லியன் ரூபாயையும், விபத்துக் காரணமாக உயிரிழந்தால் 4 மில்லியன் ரூபாயையும் நஷ்டஈடாக வழங்கும் வகையில் அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .