Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2023 மார்ச் 06 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ACCA இன் ‘நிலைத்தன்மை அறிக்கையிடல் விருதுகள் – 2022’ இல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி வெற்றியாளராகவும், பொதுச் சேவைகள் பிரிவில் வெற்றியாளராகவும் கெளரவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் தொடர்பாக பல்வேறு தொழில்துறைகளைச் சார்ந்த நிறுவனங்களிடமிருந்து கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவிலான ஏராளாமான விண்ணப்பங்களை பெற்றிருந்தபோதிலும், அவற்றுள் டயலொக் நிறுவனமே அதன் விரிவான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட நிலைத்தன்மை அறிக்கைக்காக அங்கீகரிக்கப்பட்டது. அதன்படி டயலொக் நிறுவனமானது, நாட்டின் முதல் மூலோபாயம், நிலைத்தன்மை சிக்கல்களின் பொருள் பற்றிய தெளிவான புரிதல் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக நடுவர் குழுவால் பாராட்டப்பட்டது. மேலும், இது டயலொக்கின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
"ACCA இடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நாங்கள் பெருமையடைகிறோம், இது நிலைத்தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது" என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் "நிலைத்தன்மை என்பது எங்கள் வணிக மாதிரியின் மையப் பொருளாக அமைந்துள்ளது, மற்றும் நாம் செய்யும் எல்லா விடயங்களிலும் அதுவே நமது நோக்காக உட்பொதிந்துள்ளது. அதற்கமைய, சமூகத்தில் எங்களின் தாக்கத்தையும், நிலைத்தன்மை அறிக்கையின் தரத்தையும் தொடர்ந்து மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நமது பங்குதாரர்கள் அனைவருக்கும் நிலையான எதிர்காலத்தை நோக்கி நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் " எனவும் குறிப்பிட்டார்.
2004 ஆம் ஆண்டு தொடக்கம் வருடாந்தம் வழங்கப்பட்டு வருகின்ற ACCA நிலைத்தன்மை அறிக்கையிடல் விருதானது, வணிக உத்தி, பெருநிறுவன நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான வலுவான தொடர்பை மேம்படுத்தி, நிலைத்தன்மை அறிக்கையிடலில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரித்து விருது வழங்கி கெளரவித்து வருகின்றது. இந்த விருதுகள் அறிக்கையிடல் மற்றும் நடைமுறைகளில் நிலைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ள நிறுவனங்களை ஊக்குவித்து அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago