2023 ஜூன் 01, வியாழக்கிழமை

நெஸ்லே முகாமைத்துவப் பணிப்பாளர் பேர்ன்ஹார்ட் ஸ்டெஃபான்

Editorial   / 2023 பெப்ரவரி 28 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஸ்லே லங்கா பிஎல்சி நிறுவனம் தனது முகாமைத்துவப் பணிப்பாளராக பேர்ன்ஹார்ட் ஸ்டெஃபான் தெரிவு செய்துள்ளது. மார்ச் 1, 2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமித்துள்ளது.

 ஜேசன் அவன்சென்யாவின் பதவிக்காலம் 2023பெப்ரவரி 28, இல் முடிவடைகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜேசன் தனது பதவிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான சவால்களை எதிர்கொண்டு இலங்கை மற்றும் மாலைதீவில் நெஸ்லே நிறுவனத்தின் செயல்பாடுகளை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளதுடன், 2023மார்ச் 1 ஆ​ம் திகதி முதல் நெஸ்லே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் முகாமைத்துவப் பணிப்பாளராகப் புதிய பொறுப்பை ஏற்கின்றார்.

22 வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன் நெஸ்லே லங்கா நிறுவனத்தில் இணைந்துகொள்கின்ற பேர்ன்ஹார்ட் ஸ்டெஃபான்  , பிரான்சில் உள்ள நெஸ்லே வோட்டர்ஸ் நிறுவனத்துடன் கூட்டிணைப்பு முயற்சிகள் மற்றும் பிற வணிக கையகப்படுத்துதல் துறையில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் சுவிட்சலாந்தில் உள்ள நெஸ்லே வோட்டர்ஸில் கூடுதல் பணிப்பொறுப்புடன் பல்வேறு பாத்திரங்களை ஏற்றுக்கொண்டார், இறுதியில் 2007 இல் ஜேர்மனியில் நெஸ்லே வோட்டர்ஸ் டிரெக்ட் இன் உள்நாட்டு வணிக முகாமையாளராக மாறினார்.

ஒரு வருடத்தின் பின்னர், அவர் நெஸ்லே பீட்டர்ஸ் ஐஸ்கிரீமிற்கான விற்பனை வழிமுறை மற்றும் செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக அவுஸ்திரேலியாவுக்கு இடம் மாற்றம் பெற்று நான்கு ஆண்டுகளாக பணியாற்றினார்.

அதன் பின்னர் மூலோபாயம் மற்றும் வணிக மேம்பாட்டிற்கு தலைமை தாங்குவதற்காக 2012 இல் சீனாவுக்குச் சென்றார். 2017 ஆம் ஆண்டில், அவர் சுவிட்சலாந்திற்கு ஆசியா, ஓசானியா மற்றும் ஆபிரிக்கா வலயத்தின் பிராந்திய முகாமையாளராகத் திரும்பினார்.

 சீனா, தெற்காசிய பிராந்தியம் மற்றும் நெஸ்லே பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அவரது வழிகாட்டல் உதவிகளை வழங்கியதோடு, இவ்வலயம் மற்றும் ஐஸ்கிரீமிற்கான சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் இலத்திரனியல் வணிகத்திற்கு தலைமை வகித்தார். ஒரு வருடத்திற்கு முன்பு நெஸ்லே ஆனது சீன வலயத்தை உருவாக்கியபோது, பேர்னி  அந்த அணியில் வலய துணைத் தலைவராக இணைந்தார்.

தெற்காசியப் பிராந்தியம், அதன் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய பேர்னியின் பரந்த அனுபவமும், ஆழமான அறிவும், நெஸ்லே லங்கா பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளராக தனது புதிய பாத்திரத்தில் வெற்றிகரமாக முன்செல்ல அவருக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .