2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

செலான் வங்கியின் வரிக்குப் பின்னரான இலாபம் ரூ. 1 பில்லியனாகப் பதிவு

S.Sekar   / 2021 மே 17 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக ஏற்பட்ட பாரிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், செலான் வங்கியானது 2021 இன் 1ஆம் காலாண்டு காலப்பகுதியில் ரூ. 1.0 பில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாக பதிவு செய்துள்ளது.

குறைந்த வட்டி வருமானங்கள் மற்றும் மிதமான அளவிலான கடனேட்டு வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக, 2020ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இக் காலாண்டில் வங்கியின் வட்டி வருமானம் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், குறைந்த நிதியிடல் செலவின் காரணமாக தேறிய வட்டி வருமான எல்லையானது சிறியதொரு அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் ரூ. 1.0 பில்லியனில் இருந்து ரூ. 1.2 பில்லியனாக சிறியளவில் அதிகரித்ததன் மூலம், ஆண்டுக்கு-ஆண்டு அடிப்படையில் 17.41% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வணிக மற்றும் பிணை தொகுதிகள் அதிகரித்தமையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. 

வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமான வளர்;ச்சி 22.25% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020 இன் 1ஆம் காலாண்டு காலப்பகுதியில் ரூ. 69.6 மில்லியனாக பதிவு செய்யப்பட்ட நிதிச் சொத்துக்களை அங்கீகார நீக்கம் செய்ததன் மூலம் ரூ. 185.2 மில்லியனாக அதிகரித்தமை மற்றும் நாணயமாற்று வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக ஏனைய தொழிற்பாட்டு வருமானமானது ரூ. 858.8 மில்லியனால் அதிகரித்தமை ஆகியவற்றில் இருந்தான தேறிய வருவாய்களே இவ் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளன. மறுபுறத்தில், வணிகச் செயற்பாடுகள் ரூ. 611.4 மில்லியன் நட்டமொன்றை பதிவு செய்துள்ளன. தொழிற்பாட்டு வருமானத்தில் ஆண்டுக்கு-ஆண்டு அடிப்படையிலான வளர்ச்சியை ஸ்தம்பிக்கச் செய்த, முதல்நிலை ஆவணங்கள்; (Derivatives) மீதான சந்தை விலைச்சீராக்க நட்டங்களே இதற்கு பிரதான காரணமாகும்.

2020 இன் 1ஆம் காலாண்டில் ரூ. 1.1 பில்லியனாக காணப்பட்ட வங்கியின் மதிப்பிறக்கச் செலவுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இக் காலாண்டில் ரூ. 2.2 பில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 94.53% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.  வங்கியால் உள்வாங்கப்பட்ட ஆக்ரோஷமான மதிப்பிறக்க ஏற்பாட்டுக் கொள்கையே இதற்கு வழிவகுத்தது.

2020 இன் 1ஆம் காலாண்டில் ரூ. 3.3 பில்லியனாக பதிவு செய்யப்பட்ட வங்கியின் மொத்த தொழிற்பாட்டு செலவினங்களுடன் ஒப்பிடுகையில், 2021 இன் 1ஆம் காலாண்டில் ரூ. 3.4 பில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 'லீன்' தத்துவ அடிப்படையிலான தன்னியக்கமாக்கல் முன்னெடுப்புக்களை விஸ்தரிப்பதிலும் அதேபோன்று முக்கியமான கட்டுப்படுத்தக் கூடிய கிரய பிரிவுகளில் செலவை கட்டுப்படுத்துவதிலும் வங்கி தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தியது.

ஒட்டுமொத்தமாக, வங்கியானது இக் காலாண்டில் வரிக்கு முன்னரான இலாபமாக (PBT) ரூ. 1.4 பில்லியனை பதிவு செய்துள்ளது. 2020 இன் 1ஆம் காலாண்டில் இதன் பெறுமதி ரூ. 1.3 பில்லியனாக பதிவு செய்யப்பட்டது. அதேபோன்று வங்கியின் வரிக்குப் பின்னரான (PAT) இலாபம் 2020இன் 1ஆம் காலாண்டில் ரூ. 0.9 பில்லியனாக காணப்பட்ட நிலையில், 2021 இன் 1ஆம் காலாண்டில் ரூ. 1.0 பில்லியனாக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .