R.Maheshwary / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவுக்கு ஓணானின் கழுத்தில் தங்கத்தை கட்டியது போல் கொம்பு முளைத்துள்ளது என தெரிவித்த மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, அவர் தன் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கவலையடைவதாகத் தெரிவித்தார்.
தனது தனிப்பட்ட விடயங்களில், அமைச்சர் காமினி லொக்குகே தலையிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் என்ற ரீதியில் தான் எவரையும் குற்றம்சுமத்தமாட்டேன் என தெரிவித்த அவர், ஜகத் குமாரவின் குற்றச்சாட்டு தொடர்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் ஒன்றாக இருந்து பதிலளிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
15 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
1 hours ago