2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

தேசிய ஆயுள் காப்புறுதி விருதுகள் 2021 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆதிக்கம்

S.Sekar   / 2023 ஜனவரி 02 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ், அண்மையில் இடம்பெற்ற தேசிய ஆயுள் காப்புறுதி விருதுகள் 2021 நிகழ்வில் பல பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்திருந்தது. இலங்கை காப்புறுதி சம்மேளனத்தின் (IASL) சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை செயலமர்வினால் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, 13ஆவது ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களுக்கான தேசிய அமர்வு (NAFLIA) மாநாடு 2022 இன் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆயுள் காப்புறுதி விற்பனை நிபுணர்களின் சிறந்த வினைத்திறனை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் வெற்றியாளர்களின் சாதனைகளுக்காக நிறுவனம் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது. தேசிய மற்றும் பாரிய நிறுவனங்கள் பிரிவில் நான்கு தங்க விருதுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் சுவீகரித்திருந்தது.

யாழ்ப்பாணம் மற்றும் நெல்லியடி கிளைகளை வழிநடத்தும் தர்மலிங்கம் குபேந்திரன், தேசிய மட்டத்தில் மற்றும் பாரிய நிறுவனங்கள் பிரிவுகளில் சிறந்த கிளை முகாமையாளருக்கான இரு தங்க விருதுகளை சுவீகரித்தார். நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி நாளிகையின் மேல் மாகாணத்தைச் சேர்ந்த கசுன் சந்திரசிறி தேசிய மற்றும் பாரிய நிறுவனங்கள் பிரிவுகளில் சிறந்த மேற்பார்வையாளர்/அணி அல்லது அலகுத் தலைவருக்கான இரு தங்க விருதுகளை சுவீகரித்திருந்தார்.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு கிளைகளை வழிநடத்தும் கோவிந்தசாமி மதிரூபன் தேசிய மற்றும் பாரிய நிறுவனங்கள் பிரிவுகளில் சிறந்த கிளை முகாமையாளருக்கான இரு வெள்ளி விருதுகளை சுவீகரித்தார். சிலாபம் கிளையைச் சேர்ந்த இஷார பெர்னான்டோ, தேசிய மற்றும் பாரிய நிறுவனங்கள் பிரிவுகளில் மேற்பார்வையாளர்/அணி அல்லது அலகுத் தலைவருக்கான இரு வெள்ளி விருதுகளை சுவீகரித்தார்.

தேசிய மற்றும் பாரிய நிறுவனங்கள் பிரிவுகளில் பாரிய நிறுவனங்கள் பிரிவில் சிறந்த ஆலோசகருக்கான வெண்கல விருதை சிலாபம் கிளையைச் சேர்ந்த சானக அப்புஹாமி பெற்றுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .