2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப்பிரிவு ​பொறுப்பதிகாரியாக மேனகா மூக்காண்டி நியமனம்

Editorial   / 2021 ஜூன் 15 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும்  சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார்.

15 வருட கால தனது ஊடக வாழ்வில்  ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும்  கடமையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர்,  ‘தமிழ்மிரர்’ பத்திரிகையின் செய்தி ஆசிரியையாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .