Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2023 ஜனவரி 09 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, ஹற்றன் நஷனல் வங்கியுடன் கைகோர்த்து, தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடான “ரட்ட தினன சிங்கித்தோ” (தேசத்தை வெல்லும் சிறார்கள்) எனும் வெளிநாட்டில் பணிபுரிவோரின் சிறுவர்களுக்கு வலுவூட்டும் திட்டத்துக்கு கைகொடுக்க முன்வந்துள்ளது.
பொருளாதார மற்றும் சமூக மட்டங்களில் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், தேசத்தின் பொருளாதார சிறப்புக்காக பங்களிப்பு வழங்குவதில் வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் இலங்கையிலுள்ள அவர்களின் குடும்பத்தாரின் சேவைகளையும், அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் வகையில், ஹற்றன் நஷனல் வங்கி, HNB அசூரன்ஸ் மற்றும் SLT-MOBITEL ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்து, கல்வி அமைச்சு, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ் “ரட்ட தினன சிங்கித்தோ” (தேசத்தை வெல்லும் சிறார்கள்) திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மட்ட போட்டியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்பதுடன், வர்ணம் தீட்டல், நடனம், சங்கீதம் மற்றும் கட்டுரை போன்ற கலை மற்றும் இலக்கிய மட்டங்களில் அவர்களின் திறமைகளுக்கு வெகுமதிகளை வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.
தேசிய மட்ட செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வர்த்தக நாமம் எனும் வகையில், SLT-MOBITEL இனால் இவ்வாறான திட்டங்களுடன் கைகோர்த்து இலங்கையை அடுத்த கட்ட டிஜிட்டல் முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்வதில் தொடர்ச்சியான பங்களிப்பு வழங்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago