2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

'இளைஞர், யுவதிகளின் தொழில் பிரச்சினைகளுக்காக உள்ள ஒரே தீர்வு தொழிற்பயிற்சி அதிகார சபையாகும் '

Super User   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையோடு சேர்க்கப்படும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் மிக வளமான எதிர்காலமாக அமையும் எனவும் தொழிற்பயிற்சி அதிகார சபையோடு கைகோர்த்த இளைஞர், யுவதிகளுக்கு வேலை கிடைப்பது நிச்சயமாகும் எனவும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 சலூன் ரன்மலி நிறுவனத்தின் ஏற்படுத்தலின் கீழ் கொழும்பு பிஷப் கல்லூரியில் நடந்த மணப்பெண் கண்காட்சியில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்து பேசுகையிவ் 1996 உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்ற காலத்தில் ஆரம்பித்த சலூன் ரன்மலி நிறுவனம் 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக் காலம் வரையுள்ள 15 ஆண்டு காலப்பகுதிக்குள் 4 தடவை கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியுள்ளது. 

 இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தொழில் மூன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தேசிய வாழ்க்கைத்தொழில் தகைமை மட்டம் - 04 (NVQ– 04) சான்றிதழ்கள் அழகு சாதனக்கலை மற்றும் சிகையலங்காரத் துறைக்கு வழங்கும் ஒரே நிறுவனம்  சலூன் ரன்மலி அன் அக்கடமி நிறுவனமாகும். இம் மணப்பெண் கண்காட்சி நடைபெற்ற அதே நேரத்தில் 2011 ஆண்டில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்காக கிண்ணம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


 

 

 

 

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .