2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

AIA - பெண்களுக்கு பணிக்கான சிறந்த இடம்

S.Sekar   / 2023 ஜனவரி 16 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

AIA இன்சூரன்ஸ் இலங்கையில் Great Place to Work® இல் உள்ள சுயாதீன ஆய்வாளர்களால் தொடர்ச்சியாக 5 வருடங்களாக 'பெண்களுக்கு பணிக்கான சிறந்த இடமாக' அங்கீகரிக்கப்பட்டதில் பெருமிதம் கொள்கிறது. இது பெண்கள் தங்கள் தொழில் மற்றும் வாழ்வில் செழிக்க அதிக உள்வாங்கல், மேம்பாடு மற்றும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பெண்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதில் AIA மேற்கொண்ட முயற்சிகளுக்காக மற்றொரு விருது வழங்கும் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் Satynmag.com மற்றும் CIMA ஸ்ரீ லங்காவினால் மீண்டும் ஒருமுறை 'மிகச் சிறந்த மகளிர்; நட்பு பணியிடங்களில்' ஒன்றாக பெயரிடப்பட்டது. இந்த தனித்துவமான விருது, பணியிடத்தில் பெண்களை ஊக்குவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது.

இந்த விருதுகள் குறித்து AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்துரி முனவீர கருத்துத் தெரிவிக்கையில், 'எங்கள் பணியாளர்கள் அனைவருக்கும் உண்மையிலேயே பாதுகாப்பான மற்றும் வெகுமதி அளிக்கும் பணியிடமாக இருப்பதற்கு நிலையான அங்கீகாரங்களைப் பெறுவதில் நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். AIA இல் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் ஆதரவளிக்கும் அர்த்தமுள்ள கொள்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பல தசாப்தங்களாக பணியிடத்தில் சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை வளர்த்து வருகிறோம். இன்றைய சமுதாயத்தில் பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை ஆதரிப்பதற்காக பல சவால்களை ஏற்று பல பாத்திரங்களை வகிக்கின்றனர். இருப்பினும், பெரும்பாலான பெண்கள் தங்கள் தொழிலின் பொறுப்புகளை பாரம்பரிய பாலின பாத்திரங்கள் மற்றும் வீட்டில் அவர்களுக்குத் தேவையான பொறுப்புகளுடன் சமநிலைப்படுத்துவது சவாலாக உள்ளது. AIA எப்போதும் இந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து, சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் பணிச்சூழலை உருவாக்குவதை உறுதிசெய்துள்ளது' என குறிப்பிட்டார்.

AIA மனித வளப் பணிப்பாளர் துஷாரி பெரேரா மேலும் தெரிவிக்கையில், 'நாங்கள் திறமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனமாக இருக்கும் அதே வேளையில், பெண்களை மேம்படுத்துவதிலும், தகுதியின் அடிப்படையில் அவர்களின் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நிறுவனத்தின் பெண் பணியாளர்கள், கவனமாகக் கையாளப்பட்ட பக்கச்சார்பற்ற தொழில் மேம்பாட்டு செயல்முறையின் மூலம் மூத்த தலைமைப் பாத்திரங்களை ஏற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக இன்று AIA இன் சிரேஷ்ட நிர்வாகத்தில் 21% பெண்கள், நிறுவனத்தின் பெண்களுடன் காப்பீட்டு சிறப்புப் பாத்திரங்களில் 70% செயல்பாடுகளிலும் மற்றும் 63% உண்மையான அளவிலும் காணப்படுகின்றனர்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் 'அகைவருக்கும் நியாயமாகவும் மரியாதையுடனும் நடத்தப்படும் மற்றும் அவர்களின் தனித்துவம் கொண்டாடப்படும் கலாச்சாரத்தை பேணுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே, எங்கள் பணியாளர்களில் பலதரப்பட்ட பிரதிநிதித்துவத்தை விரைவுபடுத்துவதற்கான தெளிவான இலக்குகளை நாங்கள் நிர்ணயித்துள்ளோம், மேலும் அவற்றில் சிலவற்றையும் அடைந்துள்ளோம். கடந்த ஆண்டில், பணியாளர்களில் பெண்களின் சதவீதத்தை 41% வரை அதிகரித்துள்ளோம். வெல்த் பிளானர்களின் விற்பனை அணியில் 47% பெண் பிரதிநிதித்துவத்துடன், குறிப்பாக 53% பெண்கள் அதிக செயல்திறன் கொண்ட சிறந்த 100 விற்பனை வெல்த் பிளானர்களில் உள்ளனர், இதுவே பாதிக்கும் மேற்பட்ட புதிய வணிகங்களைக் கொண்டுவருகிறது. இதற்கேற்ப அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் உண்மையாக ஒத்துழைக்கக்கூடிய சூழலை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்' என் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .