2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

AMW செயற்பாடுகள் மறுசீரமைப்பு

S.Sekar   / 2022 நவம்பர் 18 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

Al-Futtaim குழுமத்தின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் நிறுவனமான AMW, இலங்கையில் தனது செயற்பாடுகளை மறுசீரமைப்புச் செய்வதாகவும், அதன் பிரகாரம் தனது செயற்பாடுகளை இடைநிறுத்தும் பகுதிகளை இனங்காணும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக AMW இன் செயற்பாடுகளை மீளமைப்புச் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், அதிக பணவீக்கம், வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் வாகனங்கள் துறையில் நிலவும் உயர் வட்டி வீதங்கள் போன்றனவும் இந்தத் தீர்மானத்தில் தாக்கம் செலுத்திய காரணிகளாக அமைந்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில், மூடப்பட வேண்டிய பகுதிகளை நிறுவனம் தெரிவு செய்யும் என்பதுடன், அடுத்த சில மாத காலப்பகுதியில் இந்த நிலையங்கள் மூடப்படும். நாடு முழுவதிலும் தனது சொந்த வளாகங்கள் மற்றும் வியாபாரங்களை பேணுவதுடன், Nissan, Suzuki, Yamaha, Renault மற்றும் New Holland போன்றவற்றுடன் வர்த்தக நாமப் பங்காண்மைகளைத் தொடர்ந்தும் கொண்டிருக்கும்.

AMW குழும முகாமைத்துவப் பணிப்பாளரான பீற்றர் மெக்கென்ஸி கருத்துத் தெரிவிக்கையில், “குடும்ப உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனம் எனும் வகையில், ஊழியர்களே எமது பிரதான சொத்தாக அமைந்துள்ளனர். எமது ஊழியர்கள் மற்றும் பங்காளர்களை நீண்ட கால அடிப்படையில் பாதுகாத்திடும் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை நாம் கொண்டுள்ளோம். இவ்வாறான தீர்மானங்கள் எப்போதும் கடினமானவையாக அமைந்திருப்பதுடன், வியாபாரத்தின் தொடர்ச்சித் தன்மையை உறுதி செய்வதற்கு இந்த மாற்றங்களை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எமது வியாபாரத்தை மீளமைத்து, எமது வலிமைகளில் அதிகளவு அக்கறை கொள்வது என்பது தந்திரோபாயமான தீர்மானமாக அமைந்துள்ளது. AMW தொடர்ந்தும் இயங்கும் நிலையில் இருப்பதையும், அதன் கொள்கைகளுக்கமைய இயங்குவதையும் மற்றும் உயர் மட்ட வாடிக்கையாளர் சேவைகளை பேணுவதையும் உறுதி செய்வதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். AMW ஐச் சேர்ந்த ஊழியர்கள் வழங்கியுள்ள சேவைகள் தொடர்பில் நாம் திருப்தியும், மகிழ்ச்சியும் கொள்வதுடன், இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் நாம் பிரவேசித்துள்ள நிலையில், அவர்களின் மீண்டெழுந்திறனையும் பாராட்டுகின்றோம்.” என்றார்.

நிர்வாகத்தை மீளமைப்பது பற்றி AMW ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் சகல ஊழியர்களுக்கும் உயர்ந்தளவு ஆதரவை வழங்குவதற்கு AMW தன்னை அர்ப்பணித்துள்ளது. அவர்களின் பெறுமதி வாய்ந்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், மீள-தொழிலுக்கு இணைத்தல், நலன்புரி மற்றும் நிதி ஆதரவு போன்றவற்றில் நிறுவனம் கைகொடுக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X