2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

Effie விருதுகள் 2022 இல் SLT-MOBITEL க்கு கௌரவிப்பு

S.Sekar   / 2023 மார்ச் 27 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL க்கு, அண்மையில் இடம்பெற்ற Effie விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரண்டு வெண்கல விருதுகள் மற்றும் மெரிட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இணையம்/தொலைத்தொடர்புகள் பிரிவில் விருதுகளை வென்றிருந்த ஒரே தொலைத்தொடர்பாடல் சேவைகள் வழங்குநராக SLT-MOBITEL திகழ்ந்தது.

இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தினால் (SLIM) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Effie விருதுகள் வழங்கும் இலங்கை பதிப்பு, உலகப் புகழ்பெற்ற சர்வதேச விருதுகள் வழங்கும் திட்டத்தின் அங்கமாக அமைந்துள்ளது. வர்த்தக நாமமொன்றின் வெற்றிகரமான செயற்பாட்டில் பங்களிப்பு வழங்கம் சகல விதமான வினைத்திறனா உள்நாட்டு சந்தைப்படுத்தல் தொடர்பாடல் திட்டங்களையும் கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்துள்ளது. உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும், சந்தைப்படுத்தல் துறையில் இந்த நிகழ்வுக்கு பெருமளவு வரவேற்பு காணப்படுவதுடன், தொழிற்துறையில் வழங்கப்படும் மிகவும் நன்மதிப்புள்ள கௌரவிப்பாக அமைந்துள்ளது.  Effie விருதுகள் 2022 நிகழ்வு 13 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நெருக்கடியான காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆக்கத்திறனான பணிகளின் வினைத்திறனில் கவனம் செலுத்தியிருந்தது.

SLT-MOBITEL இன் ‘Triple Buddy’ மற்றும் ‘Non-Stop Lokka’ ஆகியவற்றுக்கு இரு வெண்கல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தன. SLT-MOBITEL Mobile Triple Buddy திட்டத்தினூடாக, நிறுவனத்தினால் மிகவும் புகழ்பெற்ற சமூக ஊடக கட்டமைப்புகளான Facebook, WhatsApp மற்றும் YouTube ஆகியவற்றுக்கு பதின்ம வயது மற்றும் இளம் தலைமுறையினரை இலக்கு வைத்து போட்டிகரமான விலையிலமைந்த பக்கேஜ்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இந்தத் திட்டம் வெற்றிகரமானதாக அமைவதற்கு, நிறுவனத்தின் வர்த்தக நாமத் தூதுவரான ஃபலன் அன்ட்ரியா முக்கிய பங்காற்றியிருந்தார். சமூக வலைத்தளங்களில் இவரின் பாரிய பின்தொடரல்களைப் பயன்படுத்தி, SLT-MOBITEL இன் ஒன்றிணைக்கப்பட்ட ஊடக வெளிப்பாட்டில் இலங்கையின் ஒவ்வொரு நபரையும் இலக்கு வைத்து சென்றடைவதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், SLT-MOBITEL மொபைலுக்கான Nostop Lokka திட்டம், டேட்டா அணுகல் மற்றும் appகளுக்கான போட்டியாளர் அழுத்தங்களுக்கு பதிலளிப்பதாக அமைந்திருந்தது. 'Non-Stop Lokka'இனால் ஒன்பது (09) appகள் வழங்கப்பட்டிருந்ததுடன், சகல பிரிவுகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மிகவும் புகழ்பெற்ற சமூக ஊடக அப்ளிகேஷன்களை சிக்கல்களில்லாத முறையில் இணைவதற்கு வாய்ப்பளித்திருந்தது.  இந்தத் திட்டம் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்திருந்ததுடன், சிறந்த பெறுபேறுகளுடன், SLT-MOBITEL ஐ புத்தாக்கமான தலைவராக நிலைநிறுத்துவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .