2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

Forbes Marshall இலங்கையில் 30 வருடங்களைப் பூர்த்தி

S.Sekar   / 2023 மார்ச் 13 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

Forbes Marshall லங்கா பிரைவட் லிமிடெட், கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில், நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளையும், இலங்கையின் புகழ்பெற்ற நிறுவனங்களுடனான வளர்ந்து வரும் பங்காண்மைகளையும் பிரதிபலித்து, தனது 30 வருடப் பூர்த்தியைக் கொண்டாடியது.  

பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவுகளின் பல்வேறு தொழிற்துறைகளைச் சேர்ந்த 500 க்கும் அதிகமான புகழ்பெற்ற நபர்கள் பங்கேற்றிருந்தனர். “செயன்முறை மற்றும் வலு வினைத்திறனுக்காக கைகோர்த்தல்” எனும் தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில், செயன்முறை மற்றும் வலு வினைத்திறன் தொடர்பில் புத்தாக்கமான தீர்வுகள், கண்காணிப்பு மற்றும் மதிப்பாய்வு அல்லது வினைத்திறன் குறிகாட்டிகள் மற்றும் Steam System Score Card கருத்திட்டம் போன்றன தொடர்பான தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன.

Forbes Marshall லங்கா என்பது Forbes Marshall குரூப் கம்பனியாக திகழ்கின்றது. Forbes Marshall இன் 75 வருடங்களுக்கு மேலான அனுபவத்துடன், Forbes Marshall லங்கா தற்போது, இலங்கையில் steam boilers, steam accessories, control instrumentation மற்றும் effluent மற்றும் emission monitoring systems போன்றவற்றுக்கான சந்தை முன்னோடியாகத் திகழ்கின்றது.  2018 ஆம் ஆண்டில், Forbes Marshall லங்கா, இலங்கை சிறந்த வலு சேவைகள் நிறுவனத்தின் வலு வினைத்திறன் மேம்படுத்தல் பிரிவில் Gold Flame விருதை Forbes Marshall லங்கா வெற்றியீட்டியிருந்தது.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் லொஷான் பலயன்கொட தனது வரவேற்புரையில், இலங்கையில் 30 வருட கால பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களிப்பு வழங்கியிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். கடந்த 75 வருட காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் வியாபாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு Forbes Marshall வலுவூட்டுகின்றமை பற்றி குறிப்பிட்டிருந்தார். பேராதனை பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் றுகுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பொறியியல் பீடங்களில் நிறுவப்பட்டுள்ள மூன்று steam ஆய்வுகூடங்களினூடாக பட்டதாரி மாணவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் மத்தியில் அறிவுப் பகிர்வினூடாக, எதிர்கால பணியாளர் செயலணிக்கு பங்களிப்பு வழங்குவதில் Forbes Marshall இன் பங்கு தொடர்பில் அவர் விளக்கமளித்திருந்தார்.

Forbes Marshall இன் Steam கட்டமைப்பு பிரிவின் பொது முகாமையாளர் சச்சின் மஹஜன் விளக்கமளிக்கையில், value of uptime, mainline trapping, process trapping மற்றும் condensate recovery தொடர்பில் விளக்கமளித்திருந்தார். steam கட்டமைப்பொன்றில் வலு மீட்சி சதவீதம் தொடர்பான புரிந்துணர்வை வழங்கும் condensate recovery factor (CRF) என அறியப்படும் condensate recovery சதவீதம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை இவர் விளக்கியிருந்தார்.  ஒவ்வொரு வாடிக்கையாளர் வளாகத்திலும் விளக்கமான ஆய்வுகளை மேற்கொண்டு, எரிபொருள் கட்டணப் பட்டியலில் 1-5 சதவீத சேமிப்பை இலக்கு வைத்து Forbes Marshall பொறியியலாளர்கள் எவ்வாறு செயலாற்றுகின்றனர் என்பது பற்றி விளக்கமளித்திருந்தார்.

Forbes Marshall மற்றும் ஜேர்மனியின் KROHNE Messtechnik GmbH இன் இணை நிறுவனமான Krohne Marshall இன் பொது முகாமையாளர் அதுல் சிங் குறிப்பிடுகையில், மதிநுட்பமான அளவீட்டுப் பெறுமதி பற்றி விளக்கமளித்திருந்தார். எய்தப்பட்ட நுகர்வு மற்றும் சேமிப்பு என்பன தொடர்பில் கண்காணிப்பு மற்றும் அளவீடு போன்றவற்றில் தொழிற்துறையினால் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொடர்பிலும், KROHNE தயாரிப்புத் தெரிவுகள் எவ்வாறு அவற்றை துல்லியமாக கண்காணிக்க உதவுகின்றன என்பது பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார்.

நிகழ்வின் இறுதியாக, Forbes Marshall இன் வலுச் சேவைகள் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் பி.சி. பிரகாஷ் விளக்கமளிக்கையில், Steam System Score Card பற்றிக் குறிப்பிட்டிருந்ததுடன், Forbes Marshall இன் 75 வருடங்களுக்கு மேலான செயன்முறைசார் அனுபவத்தினூடாக இந்தக் கொள்கையை எவ்வாறு வடிவமைக்க முடிந்தது மற்றும் பாதுகாப்பு மற்றும் வினைத்திறனை மேம்படுத்தவும், சூழலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை தணிப்பதில் எவ்வாறு இது பயனளிக்கின்றது என்பது பற்றியும் விளக்கமளித்திருந்தார். தொழிற்துறையின் சராசரி பெறுமதி தற்போது 70 சதவீதமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், முறையாக செயற்படுத்தலினூடாக ஆலைகளால் 100 சதவீத புள்ளிகளை எய்த முடியும் என்றார். இந்தச் சிறப்புப் பயணத்தில் Forbes Marshall உடன் கைகோர்க்குமாறு அவர் பார்வையாளர்களை அழைத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .