2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

Francophonie 2023 நிகழ்ச்சி

S.Sekar   / 2023 மார்ச் 21 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் சர்வதேச அமைப்பான la Francophonie இன் அனுசரணையுடன், சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பாடல்கள் ஒன்றிணைந்த இசை நிகழ்வு, இலங்கையின் மூன்று பிரதான நகரங்களில் நடத்தப்படவுள்ளது. இந் நிகழ்வை Francophonie 2023 இனை கொண்டாடும் வகையில் புகழ்பெற்ற "Les Monsieur Monsieur" குழுவின் Laurent BRUNETTI மற்றும் Mario PACCHIOLI இருவரும் இணைந்து நடத்தவுள்ளனர்.

அறிமுக நிகழ்வு இலங்கை மன்றக் கல்வியகத்தின் (SLFI) ‘Garden Nuga’ பகுதியில் மார்ச் மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப.7.00 மணி முதல் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து இரண்டாம் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் மார்ச் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப.7.00 மணி முதல் இடம்பெறும். இறுதி நிகழ்வு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மார்ச் 28 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பி.ப.6.00 மணிக்கு இடம்பெறும். இந் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் பார்வையார்களுக்கு அனுமதி இலவசம். 

இவ் இசைப்பயணத்தில் மேற்குறிப்பிட்ட பாடகர்களின் சொந்த இசையமைப்பில் உருவான பாடல்கள் மற்றும் பிரான்ஸ், சுவிஸ் நாட்டு இசையமைப்பாளர்களின் சிறந்த இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் இசைக்கப்படவுள்ளது. இப்பாடல்கள் பாடகர்களின் உணர்வுபூர்வமான ஆற்றுகை மற்றும் தனித்துவமான இயலிசை விளக்கங்களுடன், மொழித் தடைகளை கடந்து பார்வையாளர்களை மெய்மறந்து ரசிக்க வைக்கும். இவ்விரு இசைக் கலைஞர்களும் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இசைப்பயிற்சி வகுப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Laurent BRUNETTI அவரின் இளம் வயது முதல் இயல் இசை துறையை தமது தொழில் வாழ்க்கையாக உருவாக்கினர். பியானோ அல்லது இணைந்த இசைக்குழுவுடன் சேர்ந்து BRUNETTI, பாடல் வரிகளுக்கு இசையமைத்தார் அத்துடன் இயலிசை ஆற்றுகைக்கான மெல்லிசை மெட்டுகளையும் வழங்குகின்றார். இதுவரை ஐந்து இசை தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவர், ஏனைய இசைக் கலைஞர்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். 

Mario PACCHIOLI தமது இசை வாழ்க்கைப் பயணத்தை ஒரு பியானோ வாசிப்பவராகவும் ஒபெரா பாடகராகவும் 7 வயதில் ஆரம்பித்திருந்தார். சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்துள்ளதுடன் நான்கு இசை தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவர் Los Angeles நகரின் Musicians Institute of Technology of Hollywood தமது கலைத்திறமையை மேம்படுத்தியிருந்தார். பிரான்ஸில் திரை நடிகராகவும் பயிற்சி பெற்றுள்ளார். இவரின் அண்மைய இசை தயாரிப்பான "Remas" ஐ தமது தாய் மொழி Romansh க்கு சமர்ப்பணம் செய்திருந்தார். இணைந்த இசைக்குழு, தனித்துவமான குரல் மற்றும் பாடகர் குழு ஆகியவற்றுக்காக PACCHIOLI புகழ்பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .