2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

SLT-MOBITEL இடமிருந்து mAgent அறிமுகம்

S.Sekar   / 2023 ஜனவரி 23 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, தனது ‘mAgent’ சேவையை அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு Fixed மற்றும் Mobile சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவர்களின் வீட்டுக்கே சென்று தமது சேவைகளை தனித்துவமாக வழங்கும் வகையில் இந்த mAgent சேவை அமைந்துள்ளது.

mAgent சேவை அறிமுகத்துடன் ஹோம் மற்றும் மொபைல் பாவனையாளர்களுக்கு இந்தச் சேவையை தமது வீடுகளில் இருந்தவாறே சௌகரியமாக பெற்றுக் கொள்ள முடிவதுடன், இதர தொலைத் தொடர்பாடல் சேவைகள் பலதையும் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், mAgent திட்டத்தின் அறிமுகம் என்பது SLT-MOBITEL இன் சூழல் சமூக ஆளுகை (ESG) தந்திரோபாயத்தின் அங்கமாக அமைந்திருப்பதுடன், குறைந்த செலவில், சூழலுக்கு நட்பான சேவைகளை வழங்கி, வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவது மற்றும் பெறுமதி உருவாக்கத்தை விரிவாக்கம் செய்வதாக அமைந்துள்ளது. mAgent திட்டத்துக்கு மேலதிகமாக, SLT-MOBITEL இனால் இளம் தலைமுறையினருக்கு தொழில் வாய்ப்புகளுடனான வலுவூட்டல்கள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு நிபுணத்துவம் மற்றும் தொழிற்துறையுடன் தொடர்புடைய திறன்களும் வழங்கப்படுகின்றன.

1717 உடன் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட mAgent உடன் வாடிக்கையாளர்கள் தொடர்பை ஏற்படுத்த முடியும். புதிய இணைப்புகள், சாதனங்கள் கொள்வனவு, மற்றும் சகல ஹோம் மற்றும் மொபைல் தொடர்புடைய வினைத்திறனான மற்றும் சிக்கனமாக சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் சகல mAgentகளுக்கும் அவசியமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், நவீன கணனி வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனூடாக அவர்களுக்கு உரிய காலப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

குறிப்பிட்ட பிரதேசத்துக்கு ஒரு mAgent நியமிக்கப்படுவார். எனவே வாடிக்கையாளர் ஒருவர் mAgent சேவை உடன் தொடர்பை ஏற்படுத்தியதும், குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான mAgent விஜயம் செய்து, வாடிக்கையாளரின் தேவையை பாதுகாப்பான முறையிலும், சிக்கல்களற்ற வகையிலும் நிறைவேற்றுவார்.

வர்த்தக நாம சம்பியன்கள் எனும் வகையில், SLT-MOBITEL mAgent திட்டமானது, தொலைத்தொடர்பாடல் துறையில் பிரத்தியேமான வீட்டு வாசலுக்கு வருகை தரும் சேவையை வழங்கி, இலங்கையர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, தேசத்துக்கு அடுத்தகட்ட அபிவிருத்தியை நோக்கி நகர்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .