2023 ஜூன் 07, புதன்கிழமை

SLT-MOBITEL க்கு ஆசிய தொழில்நுட்ப சிறப்பு விருதுகள் 2022 ல் கௌரவிப்பு

S.Sekar   / 2023 பெப்ரவரி 24 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL க்கு ஆசிய தொழில்நுட்ப சிறப்பு விருதுகள் 2022 நிகழ்வில், பெருமைக்குரிய “வலையமைப்பு மற்றும் புரோட்பான்ட் – தொலைத்தொடர்பாடல்கள் தொழில்நுட்ப சிறப்பு விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. SLT-MOBITEL இனால் LTE 850MHz புரோட்பான்ட் தீர்வை புத்தாக்கமான வகையில் பயன்படுத்தி நாட்டின் பின்தங்கிய கிராமப் பகுதிகளுக்கும் பரந்தளவு வலையமைப்பை வழங்கியிருந்தமையை கௌரவிக்கும் வகையில் இந்த உயர் விருது வழங்கப்பட்டிருந்தது.

தேசத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சிறந்த கிராமிய இணைப்புத்திறனைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணரந்து, SLT-MOBITEL இன் புத்தாக்கமான LTE 850MHz வலையமைப்பு நாடு முழுவதிலும் கிராமிய வலையமைப்பு இணைப்புத் திறனை மேலும் மேம்படுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், ஒவ்வொரு இலங்கையருக்கும் SLT-MOBITEL இன் Sub-1GHz 850MHz LTE வலையமைப்பின் அனுகூலத்தை அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பிரயாணக் கட்டுப்பாடுகளுடனான காலப்பகுதியில், அனைவருக்கும் புரோட்பான்ட் இணைப்பு முக்கிய தேவையாக அமைந்திருந்த காலப்பகுதியில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், SLT-MOBITEL இன் LTE 850MHz தீர்வினால், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த தேசிய கீற்றை வளங்கள் மீட்கப்பட்டிருந்தது.  வலையமைப்பு மேம்படுத்தலினூடாக மொபைல் பிரிவினால் ஏற்கனவே புரோட்பான்ட் சேவைகளுக்கு அணுகலைக் கொண்டிராத மேலதிக 700,000 வாடிக்கையாளர்கள்களை இணைத்துக் கொள்ள முடிந்தது. LTE 850MHz நிறுவுகையுடன், SLT-MOBITEL இனால் கொவிட்-19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்கு மேலும் வலிமை சேர்க்க முடிந்திருந்தது. கிராமிய சமூகங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கும், வீடுகளிலிருந்து பணியாற்றுவோருக்கும், தேசிய அதிகாரத் தரப்பினருக்கும், கொவிட்-19 அவசர நிலைகளில் இயங்குவதற்கான வசதிகளை வழங்கி, இலங்கையில் காணப்பட்ட டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்திருந்தது.

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில், SLT-MOBITEL இன் LTE 850MHz செலவுச் சிக்கனமாக புரோட்பான்ட் சேவைகளினூடாக, கல்வி, பணி, சுகாதாரப் பராமரிப்பு, தேசிய அவசர நிலைகள் போன்றவற்றில் கிராமிய சமூகங்களை மேம்படுத்துவதற்கு பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்டு, அச்சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் மற்றும் புரோட்பான்ட் ஆகியவற்றை சகாயமான விலையில் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

5G, Metaverse, AI, Big Data மற்றும் பல அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கு இலங்கையை வழிநடத்தும் வகையில், SLT-MOBITEL இனால் தொடர்ந்தும் வலையமைப்பு உட்கட்டமைப்புகள் விரிவாக்கத்தில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதுடன், தேசத்தை அடுத்தகட்ட டிஜிட்டல் முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்லும் பணிகளும் இடம்பெறுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .