2023 ஜூன் 01, வியாழக்கிழமை

திருமணத்தன்று மரணித்த மணமகள்; தங்கையை மணந்த மணமகன்

Ilango Bharathy   / 2023 மார்ச் 01 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 குஜராத் மாநிலம், பாவ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஷால். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மணமகள் திடீரென  மணமேடையில்  மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மணமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இத்துக்க சம்பவத்துக்கு மத்தியிலும் மணமகன் ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக, மணமகள் பிரேத அறையில் இருக்கும் போதே , அவரது தங்கையுடன் மணமகனுக்குத்  திருமணம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது அப்பகுயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பலரும் தமது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .