J.A. George / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடுரோட்டில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளதை பொதுமக்கள் கண்டும் காணாதது போல் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காசியாபாத் நகரம் லோனியின் அங்கூர் விஹார் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்த் ஷர்மா (21) என்பவருக்கும் பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டது.
கோவிந்த் ஷர்மா தனது நண்பர் அமித் குமாருடன் சேர்ந்து சாலையில் அஜய் குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
இந்த வெறிச்செயலை சாலையில் சென்றவர்கள் பார்த்தனர். ஆனால் அவர்கள் கண்டும் காணாதது போல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் மீது பொலிஸாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து 2 பேரையும் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
எட்டு மாதங்களுக்கு முன்பு அஜய் தனது கடையை அதே கோவிலுக்கு வெளியே திறந்ததால், கோவிந்தின் வணிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்த், தனது நண்பருடன் அஜய் குமாரை கொல்ல சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்.
அஜய் தனது கடையை மூடிவிட்டு வீடு திரும்புவதற்காக ஓட்டோவில் ஏறியபோது, அவரை தரதரவென இழுத்துச் சென்று கோவிந்தும் அவரது நண்பரும் இரும்பு கம்பியால் அஜய்யை சரமாரியாக தாக்கி கொன்றிருக்கிறார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
9 minute ago
13 minute ago
31 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
31 minute ago
31 minute ago