2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

பில்கேட்ஸ் வாங்கிய சொகுசு கப்பலில் என்ன சிறப்பு தெரியுமா?

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் பில்கேட்ஸ் என்றால் உலகின் மிகப்பெரிய பணக்காரர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் பில் ம்ற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆரம்பித்து உலகில் பல சமுதாய நற்காரியங்களை செய்து வருபவர் என்றுதான் அனைவருக்கும் தெரியும். 

இந்நிலையில்  பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.4,600கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

பில்கேட்ஸ் வாங்கியுள்ள இந்த சொகுசு கப்பலின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த கப்பலில் உள்ளதாக தெரிகிறது. சினோட்(sinot) குறிப்பாக சினோட்(sinot) என்ற நிறுவனத்தால் இந்த சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது..

இந்த கப்பல் 3,750நாட்டிகல் மைல்கள் வரம்பில், 17 knots டாப் ஸ்பீடில் இயங்கும் எனக் கூறப்படுகிறது. பின்பு இந்த கப்பலின் நீளம் 12மீட்டர் ஆகும். 

சினோட் நிறுவனம் கூறியுள்ள தகவலின் அடிப்படையில், எரிபொருள் கலங்களுக்கு மின் ஆற்றலை வழங்கும் ஹைட்ரஜனால் இந்த சொகுசு கப்பல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் அழகியல் சார்ந்தும் இந்த சொகுசு கப்பலை வடிவமைத்து வருகிறோம் என சினோட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு காரணங்களால் இந்த அற்புதமான சொகுசு கப்பல் 2024க்கு முன்னர் கடலுக்கு செல்ல வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளிவந்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X