2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

மெத்தையை உண்ணும் மெத்தையான பெண்

Editorial   / 2023 பெப்ரவரி 05 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உணவு விசயத்தில் நம்மில் பலருக்கும் சில வினோத பழக்கங்கள் இருக்கும். அதில் ஒருபடி மேலே சென்று மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.   கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த விசித்திர பழக்கத்துக்கு அவர் அடிமையாகி உள்ளாராம்.

25 வயதான ஜெனிபர் என்கிற அந்த பெண் பிரபல அமெரிக்க டி.வி. சேனலில் ஒளிபரப்பாகும் 'என் விசித்திரமான போதை' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பின்னரே அவரின் இந்த வினோத பழக்கம் வெளியுலகத்துக்கு வந்திருக்கிறது. தனது 5 வயதில் இருந்தே மெத்தையை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருப்பதாகவும், முதன் முதலில் கார் சீட்டில் இருந்த பஞ்சுகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்ததாகவும் ஜெனிபர் கூறுகிறார்.

நாட்கள் செல்லசெல்ல பழக்கம் மோசமானதே தவிர, அதனை விட்டொழிக்க முடியவில்லை என்றும், தற்போது ஒருநாளில் ஒரு சதுர அடி மெத்தையை உண்ணும் அளவுக்கு அதற்கு அடிமையாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒருசமயம் தனது மெத்தை முழுவதையும் சாப்பிட்டு முடித்த பின்னர் தனது தாயாரின் மெத்தையையும் சாப்பிட்டு முடித்தாரம் ஜெனிபர்.

எனினும் அதிர்ஷ்டவசமாக ஜெனிபரின் இந்த பழக்கமானது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் எந்தவித உடல்நல பாதிப்புகளையும் இதுவரை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், ஜெனிபருக்கு உடல் பருமன் அதிகரித்து இருப்பதால், மெத்தையை சாப்பிடுவதை நிறுத்தாவிட்டால், எதிர்பாராத உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X