2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

காணாமற் போன மனைவி; கணவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Ilango Bharathy   / 2023 ஜனவரி 05 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹரியானாவின், ரோதக் பகுதியை சேர்ந்தவர் ‘கேஹர் சிங்`.  55 வயதான  இவருக்கு தர்ஷினி என்ற மனைவி உள்ளார்.

 மனநலம் பாதிக்கப்பட்ட தர்ஷினி, கடந்த 2013ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாகக் காணாமல் போயுள்ளார். இதனால் தர்ஷினியைத் தேடி  கேஹர் சிங் வருடக் கணக்கில்  தேடி அலைந்துள்ளார். எனினும் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ஒரு கட்டத்திற்கு மேல் தர்ஷினியைத் தேடுவதை அவர்  கைவிட்டுவிட்டார் .

இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து தர்ஷினி தற்போது கர்நாடகாவின் குடகு பகுதியில் உள்ள தணல் என்ற காப்பகத்தில் இருப்பதாக கேஹருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 குறித்த காப்பகத்தினால் தர்ஷினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கொஞ்சம் கொஞ்சாக தன்னைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.

இந்நிலையில் தர்ஷினி கொடுத்த தகவல்களின் அடிப்படையில்,குறித்த  காப்பகத்தினர் ஹரியானா பொலிஸாரின் மூலம் கேஹர் சிங்கிற்கு இது குறித்துத் தெரியப்படுதியுள்ளனர்.

 இதனையடுத்து 9 ஆண்டுகளின் பின்னர்  தனது மனைவியைப் பார்த்த கேஹர்  ”என் வாழ்நாளின் மிகப்பெரிய பரிசு இது தான்” எனக் கூறி கண்ணீர் மல்க தர்ஷினியைக் கட்டியணைத்துள்ளார்.

இச்சம்பவமானது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .