2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

கொரோனா மாஸ்க்குடன் சுத்தும் செல்லபிராணிகள்!!!

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் தங்களது செல்லப்பிராணிகளுக்கும் பாதுகாப்புக்காக முகமூடிகளை அணிவித்து வருகின்றனர்.

சீனாவில் மட்டுமே கொரோனா வைரஸால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து சீனாவில் பலரும் தற்காப்பிற்காக முகமூடிகளை அணிந்து வருகின்றனர்.

அதே போல் தாங்கள் வளர்க்கும் பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளுக்கு முகமூடிகளை அணிவித்து வருகின்றனர். 

கொரோனா வைரஸால் செல்லப்பிராணிகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், பாச மிகுதியால் தங்களது செல்லப்பிராணிகளுக்கும் முகமூடி அணிவிப்பது வேடிக்கையாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X