2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

’சமையல் செய்யக் கற்றுக்கொள்’; கண்டித்ததால் உயிரை மாய்த்த யுவதி

Ilango Bharathy   / 2023 ஜனவரி 23 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ‘சமையல் செய்யக் கற்றுக்கொள்’ எனத்  தாய் கண்டித்ததால், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த யுவதியொருவர் தனது  உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தைச்  சேர்ந்தவர் குப்புராஜ். இவருக்கு ‘கிறிஸ்டில்லா மேரி‘ என்ற மகள் உள்ளார்.

19 வயதான மேரிக்கு வருகின்ற 1 ஆம் திகதி  திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேரி தனது பெரும்பாலான  நேரத்தைத்  தொலைபேசியிலேயே கழித்து வந்ததால் ஆத்திரமடைந்த அவரது தாயார் ”உனக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அதற்குள் சமையல் செய்யக் கற்றுக்கொள்” எனக் கண்டித்துள்ளார்.

இதனால் வேதனை அடைந்த மேரி  நேற்று முன்தினம்(21)   வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவரது பெற்றோர்  மேரி  உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும் அவர் வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .