Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைத்தளத்தில் பிரபலமான ( social media influencer ) பெண்ணொருவர் தனது
மூக்கின் அமைப்பை மாற்ற நினைத்து உயிரிழந்த சம்பவம் அண்மையில் ரஷ்யாவில்
இடம்பெற்றுள்ளது.
மெரினா லெபடேவா (Marina Lebedeva) என்ற 31 வயதான பெண்ணே இவ்வாறு
உயிரிழந்தவராவார்.

இவர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவக் கூடம் ஒன்றில் மூக்கினை மாற்றி
அமைப்பதற்கான பிளாஸ்டிக் சிகிச்சை செய்யத் திட்டமிட்டு, அதனை
மேற்கொண்டுள்ளார்.
Rhinoplasty என்ற இச் சிகிச்சையானது இலங்கை மதிப்பில் சுமார்11 இலட்சம் ரூபாய் (5500 டொலர்) செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது திடீரென அவரின் உடலின் வெப்பம் அதிகரித்துள்ளது.
இவ் அசாதாரண நிலையில் அவரது உயிரைக் காக்க மருத்துவர்கள் போராடியும் அது
முடியாமல் போயுள்ளது. இதனையடுத்து அவரது மரணத்திற்குக் காரணமான மருத்துவக் கூடத்தின் மீது மருத்துவ அலட்சியத்தை சுட்டிக்காட்டி வழக்கு பதியப்பட்டுள்ளது.
”பலமுறை சோதனை செய்த பிறகு தான் சிகிச்சை மேற்கொண்டதாகவும், மெரினாவுக்கு
மரபு ரீதியான பாதிப்பு ஏதேனும் இருந்திருக்கலாம் ”எனவும் அவருக்கு அறுவை சிகிச்சை
மேற்கொண்ட மருத்துவக் கூடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago