2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

இணைய விளையாட்டில் பணத்தை செலவழித்த சிறுவன்

J.A. George   / 2020 செப்டெம்பர் 18 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமநாதபுரம் அருகே இணைய விளையாட்டில் பணத்தை செலவழித்த சிறுவனுக்கு, அவரது பெற்றோர் நூதன தண்டனை கொடுத்துள்ளனர்.

கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்தே மாணவர்கள் இணைய விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். 

இதனால் இணைய விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இணைய விளையாட்டு விளையாடி 90 ஆயிரம் பணத்தை செலவழித்த மாணவனுக்கு அவரது பெற்றோர் கொடுத்த நூதன தண்டனை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த நபர் ஒருவரின், 12 வயது மகன் இணையத்தில் அதிகமாக விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 

சிறுவனை பெற்றோர்கள் கண்டித்தும் அவர் நிறுத்தவில்லையாம். ஒரு நாள் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆயுதம் வாங்க பணம் செலுத்த வேண்டும் என விளையாட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தனது அப்பாவின் வங்கிக்கணக்கை பதிவிட்ட சிறுவன், ரூ.90 ஆயிரம் பணத்தையும் இணைய விளையாட்டில் ஆயுதம் வாங்க செலவழித்துள்ளார்.

தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் குறைந்ததை அறிந்த சிறுவனின் தந்தை, 1 2 3 என 90,000 வரை எழுத வேண்டும் என சிறுவனுக்கு நூதன தண்டனை கொடுத்துள்ளார். 

சிறுவனை கண்டித்து அவர் கொடுத்த இந்த தண்டனை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X