2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

70 இலட்சம் கர்ப்பம் உருவாகலாம் என்கிறது ஐ.நா

Editorial   / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் கொரோன வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிகளவான நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ளது. 

இந்த நிலை தொடர்பில், ஐ.நாவின் மக்கள்தொகை நிதியம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கருத்தடை சாதன கட்டுப்பாடுகள் காரணமாக வரும் மாதத்தில் 70 இலட்சம் கர்ப்பங்கள் உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் காரணமாக பெண்கள் அச்சத்தில் வைத்தியசாலைக்கு கூட செல்ல விரும்புவதில்லை என்றும், ஊரடங்கால் கருத்தடை சாதன தட்டுப்பாடுகளும் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஆண்கள், பெண்களும் வீட்டிலேயே இருப்பதால் மோதல் சம்பவமும் அதிகரித்துள்ளது. அத்துடன், குழந்தை திருமணம் அதிகளவு நடைபெறலாம் என்று அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X