2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

வன்னேரிக்குளம் உடைப்பெடுத்தது

Niroshini   / 2021 ஜூன் 20 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வன்னேரிக்குளத்தின் தென்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசனப் பொறியியலாளர் ரி.ரிசியந்தன், இந்நிலையில், விவசாயிகளால் மண் மூடைகள் அடுக்கப்பட்டு, குளத்தில் இருந்து நீர் வெளியேறாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வன்னேரிக்குளத்தின் தென்பகுதியில் உள்ள குளத்தில் இருந்து ஆறு வழியாக நீர் வெளியேறாமல் இருப்பதற்காக, கடந்த காலங்களில் மண் மூடைகள் அடுக்கப்பட்டதுடன், மண் அரண்களும் அமைக்கப்பட்டன என்றார்.

இந்நிலையில், குறித்த இடத்தில் தற்போது உடைவு ஏற்பட்டதால், நேற்றைய தினம் (19) விவசாயிகளால், மண் மூடைகள் அடுக்கப்பட்டு, குளத்தில் இருந்து நீர் வெளியேறாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதெனவும், அவர் கூறினார்.

குறித்த இடத்தில் நிரந்தர கட்டுமானம் முன்னெடுப்பதற்கான நிதி கிடைத்தவுடன், வேலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், ரி.ரிசியந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .