2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் ஞானசார தேரருக்கு வரவேற்பு

Niroshini   / 2021 நவம்பர் 21 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஞானசார தேரரை வரவேற்கும் வகையில், இன்று, துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

"பொதுபலசேன ஞானசார தேரர் அவர்களை, வன்னித் தமிழ் இளைஞர் கழகம் வரவேற்கின்றோம்" என்ற துண்டுப்பிரசுரங்கள், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் வடக்கிற்கான பயணம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வவுனியாவில்  ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான கருத்தறியும் கூட்டம், ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பங்குபற்றுதலுடன், இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை,  ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி, முல்லைத்தீவு ,கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ள நிலையில், வன்னித்தமிழ் இளைஞர் கழகம் வரவேற்று, துண்டு பிரசுரங்களை ஒட்டிவைத்துள்ளது.

அத்துடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் வீதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியில் ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய இராணவத்தினர் கடமையில் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .