2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் 1113 மீனவர்களுக்கு மண்ணெண்ணை

Editorial   / 2023 ஜூன் 07 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் மானிய எரிபொருளான மண்ணெண்ணைய் வழங்கும் நடவடிக்கை புதன்கிழமை (07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணையின் தற்போதைய விலை 245 ரூபாவாக காணப்படுகின்றது இந்த நிலையில் படகு ஒன்றிற்கு 75 லீற்றர் மண்ணெண்ணைய் கடற்தொழில் அமைச்சின் ஊடாக இலவசமாக வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் கொக்கிளாய் வரையான  பகுதிகளில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் பதிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு மானிய எரிபொருள் வழங்கும் நடவடிக்கை தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாயாற்று பகுதியில் உள்ளதும் மற்றும் முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ளதுமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகம் செய்யபடுகின்றது.

மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்  உள்ள புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாகவும் விநியோகம் செய்யப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர்,மற்றும் கடற்தொழில் சம்மேளன தலைவர்,மீனவ அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சரின் இணைப்பாளர்களின் பங்கு பற்றலுடன் மீனவர்களு;ககான மானிய எரிபொருள் வழங்கும் நிகழ்வு  தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X