2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள குழி

Niroshini   / 2021 நவம்பர் 25 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி சிவபாத கலையக பாடசாலைக்கு முன்பாக, பாலம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட
குழி, மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.

நேற்று (24),  பெய்த மழை காரணமாக , ஆரம்ப பிரிவு மாணவர்கள் இருவர் நீர் நிரம்பி குழிக்குள் வீழ்ந்த நிலையில், ஏனைய மாணவர்களால் காப்பற்றப்பட்டுள்ளதாக, பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், கரைச்சி பிரதேச சபையினரால், பாலம் ஒன்று அமைப்பதற்கு, குறித்த  பாடசாலைக்கு  அருகில் உள்ள வீதியில், சுமார் நான்கு அல்லது ஐந்து அடி ஆழத்தில் குழி வெட்டப்பட்டது.

இந்த நிலையில்,  தற்போது பெய்து வரும் மழை காரணமாக, குறித்த குழி நிரம்பி நீர் செல்வதனால்   ஆழமற்ற குழி என கருதிய மாணவர்கள், அதனை கடந்த செல்ல முற்பட்ட போது, தவறி வீழ்ந்துள்ளனர்.

இதையடுத்து, அதிர்ஸ்டவசமாக ஏனைய உயர்வகுப்பு மாணவர்களால் அவர்கள் காப்பற்றப்பட்டனர் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான பகுதி என எந்தவிதமான எச்சரிக்கை சமிஞ்கையும் இல்லாத நிலையில், குறித்த பகுதி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .