2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

’போராட்டங்களை கூட்டமைப்பு மலினப்படுத்தாது’

Editorial   / 2018 மார்ச் 18 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித் - கனகராசா சரவணன்

காணாமல்போனோர் தொடர்பில் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தில், கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் சேர்க்கப்படவில்லையென சிலர் தெரிவித்துவருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அத்துடன், தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படாது எனவும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நேற்று (17) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு தமிழ்க் கட்சிகள் ஆதரவு வழங்காவிட்டால், பெரும்பான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதை விடவும் எதிர்க்கட்சியாக அமர்வோம்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆட்சியமைக்க ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று ஆனந்த சங்கரி, அண்மையில் தெரிவித்திருக்கிறார். இதை மீள் பரிசீலனை செய்யுங்கள் என்ற வேண்டுகோளை ஆனந்தசங்கரியிடம் விடுக்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், இன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே பிரச்சினைகள் தோன்றியுள்ளன. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அது கொண்டுவரப்படும்போது கூட்டமைப்பு சரியானதொரு முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .