Niroshini / 2021 நவம்பர் 28 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
வடக்கு, கிழக்குத் தமிழர்களின் ஒரே நம்பிக்கையான ஊடகத்துறையை பாதுகாக்க நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரும், முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து, இன்று (28), முல்லைத்தீவு நாகரில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் கொடுமைகள் வெளிக்கொணர்வதைத் தடுக்கவே, இவ்வாறு திட்டமிட்டு ஊடகங்களை அடக்கியொடுக்குகின்ற செயற்பாடுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
அந்தவகையிலேயே, ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரனும் இராணுவத்தினால் தாக்கப்பட்டார் எனவும் கூறினார்.
"குறிப்பாக, ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்தின் தாக்கப்பட்ட தினத்தன்று, ஊடகவியலாளர் தாக்கப்படுகின்றார் என பொதுமக்களால் எனக்கு வழங்கப்பட்ட தகவலுக்கேற்ப உடனடியாக முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றிருந்தேன்.
"குறித்த ஊடகவியலாளருக்கு நான்கு இராணுவத்தினர் சேர்ந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். பச்சைமட்டையில் முட்கம்பி சுற்றி தாக்கியிருக்கின்றனர். சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் இயங்குகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கே இந்ந நிலைமை எனில், பொதுமக்களுக்கு என்ன நிலை என்பதைச் சற்றுச்சிந்திக்க வேண்டும்," என்றார்.
இந்த விடயத்திலே நீதித்துறை முறையாகச் செயற்பட்டு, ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும் சுயாதீனத் தன்மையையும் பாதுகாத்து, அதன்மூலம் எமது தமிழ் மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago