2021 ஜூலை 28, புதன்கிழமை

காயங்களுடன் 2 கடலாமைகள் கரை ஒதுங்கின

Niroshini   / 2021 ஜூன் 17 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு  கடற்கரை  பகுதியில், இன்று (16) காலை இரண்டு கடலாமைகள், பாரிய காயங்களுடன் கரையொதுங்கியுள்ளன.

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருள்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருள்கள், மன்னார் கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியிருந்தன.

இந்த நிலையில்,  கடுமையான காயங்களுடன் நேற்றுக் காலை, 2 கடலாமைகள், தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன.

அவற்றில் ஒரு கடலாமை உயிரிழந்துள்ளதோடு, மற்றைய கடலாமை உயிருடன் காணப்படுகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கடற்படையினர் கொண்டு வந்துள்ளனர்.

எனினும், நீண்ட நேரமாகியும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வராத நிலை காணப்பட்டதோடு, கடலாமைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .